ஒரு வெள்ளி, 3 வெண்கலம்: டோக்கியோ ஒலிம்பிக் பதக்க வரிசையில் இந்தியாவுக்கு 66-வது இடம்

32 தங்கத்துடன் சீனா முதலிடத்திலும், 27 தங்கத்துடன் அமெரிக்கா 2-வது இடத்திலும் உள்ள நிலையில், ஜப்பான் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஜெர்மனியை 5-4 என வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. இதன்மூலம் இந்தியா ஒரு வெள்ளி, மூன்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. நான்கு பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 66-வது இடத்தை பிடித்துள்ளது.

மல்யுத்தம் போட்டியில் ரவிக்குமார் தாஹியா வெள்ளி வென்றால் இந்தியா 59-வது இடத்திற்கு முன்னேறும். தங்கம் வென்றால் 43-வது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.

சீனா 32 தங்கம், 23 வெள்ளி, 16 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. 27 தங்கம், 33 வெள்ளி, 24 வெண்கலப் பதக்கங்களுடன் அமெரிக்கா 2-வது இடத்தை பிடித்துள்ளது.

போட்டியை நடத்தும் ஜப்பான் 21 தங்கம், 7 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கங்களுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

Sharing is caring!