20 ஓவர் போட்டி தொடர்: ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் நாளை மோதல்

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் தனது சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 20 ஓவர் போட்டி தொடரை இழந்தது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து 20 ஓவர் போட்டி, 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது.

இரு அணிகளும் மோதும் 20 ஓவர் போட்டி நாளை தொடங்குகிறது.

முதல் போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 5 மணிக்கு தொடங்குகிறது. ஆஸ்திரேலியா அணியின் ஜோஷ் பிலிப், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, ஆஸ்டன் அகர், டேனி கிறிஸ்டியன், ஹென்ரிக்ஸ், மெரிடித், மிக்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, வாடே போன்ற வீரர்கள் உள்ளனர்.

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் தனது சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 20 ஓவர் போட்டி தொடரை இழந்தது.

அதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் வெஸ்ட் இண்டீஸ் உள்ளது.

Sharing is caring!