பாராலிம்பிக்: இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி பதக்கம்.. பிரவீன்குமார் அசத்தல் !

பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் பிரவீன்குமார் இந்தியாவுக்கு மேலும் வெள்ளி பதக்கம் பெற்றுத்தந்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான 16ஆவது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர்  உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் விளையாடினார்.

அதில் பிரிட்டன் வீரர் ஜானதன் உடன் பிரவீன்குமாருக்கு கடும் போட்டி நிலவியது. இறுதியில் 2.07 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளி பதக்கத்தை பிரவீன்குமார் பதிவு செய்தார். கடும் போட்டி நிலவிய நிலையில் தங்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் பிரவீன்குமார் தவறவிட்டார்.

பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்ற 18 வயதே ஆன பிரவீன்குமார் உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர். இதன்மூலம் நடப்பு பாராலிம்பிக் தொடரில் இந்தியா 2 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 11 பதக்கங்களை வென்றுள்ளது.

Sharing is caring!