தமிழன் நடராஜனுக்கு வித்தியாசமான பட்டம் கொடுத்து வாழ்த்திய மனைவி பவித்ரா!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான நடராஜனின், மனைவி தங்களது திருமண நாள் வாழ்த்துக்களை வித்தியாசமாக குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில், ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த தமிழகத்தை சேர்ந்த நடராஜன், அதன் பின் தன்னுடைய அசாத்தியமான திறமை மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

தற்போது ஒருநாள் தொடர், டி20 தொடரில் ஒரு அசைக்க முடியாத வீரரான நடராஜன் உள்ளார். இருப்பினும் இன்னும் இவர் டெஸ்ட் போட்டியில் நிரந்தர இடம் பிடிக்க முயற்சி செய்து வருகிறார்.

இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனது பள்ளித் தோழியான பவித்ராவை திருமணம் செய்தார். அதன் படி கடந்த 4-ஆம் திகதி இவர்களின் மூன்றாம் ஆண்டு திருமண நாள் வந்தது.

திருமண நாளை கொண்டாடும் வகையில் நடராஜனின் மனைவி பவித்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், “நம் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை ஒன்றாகப் பகிர்ந்துகொள்கிறோம்.

உங்களது புன்னகை இன்னும் என்னை உருகவைக்கிறது. என் வாழ்க்கையின் காதலுக்குத் திருமண நாள் வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடராஜனை நட்டு என மட்டும் ரசிகர்கள் அறிந்திருந்த நிலையில், புன்னகை மன்னன் என்ற பட்டத்தையும் அவரது மனைவி தற்போது கொடுத்துள்ளார்.

Sharing is caring!