ஒற்றையர் பிரிவில் லீ ஷி ஜியாவுடன் பியர்லி டான் –எம் தீனா ஜோடி அரையிறுதியாட்டத்திற்கு தேர்வு

கோலாலம்பூர், மார்ச் 6- சுவிஸ்லாந்து பொது பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒன்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்திற்கு மலேசியாவின் லீ ஷி ஜியா (Lee Zia Jia) தேர்வு பெற்றார். இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் லீ ஷி ஜியா 21 -14. 21 – 17 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியாவின் B. Sai praneeth (சாய் பரனீத்தை ) வீழ்த்தினார். இன்றிரவு நடைபெறும் அரையிறுதிஆட்டத்தில் லீ ஷி ஜியா தாய்லாந்தின் Kunlavut vitidsaranனுடன் மோதுவார்.

மலேசிய பேட்மிண்டன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் மகளிர் இரட்டையர் பிரிவில் பியர்லி டான்- எம் தீனா ஜோடியும் Chong Kuan – Meng Yean ஜோடியும் அரையிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றனர். பியர்லி டான்- எம்.தீனா ஜோடி 21-19 . 21-10 என்ற புள்ளிக் கணக்கில் டென்மார்க்கின் Ammalie magelund – Freja Raviniid ஜோடியை வென்றனர். அதே வேளையில் MeiKuan – Meng Yean ஜோடி 22-20. 21-16 என்ற புள்ளிக் கணக்கில் கனடாவின் Rachel Honderich – Tsai ஜோடியை வீழ்த்தினர்.

மகளிர் இரட்டையர் பிரிவில் அரையிறுதியாட்டத்தில் இரண்டு மலேசிய ஜோடிகள் மோதுவதால் ஒரு ஜோடி இறுதியாட்டத்திற்கு தேர்வு பெறுவது உறுதியாகிவிட்டது.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் மலேசியாவின் Aaron Chia –Soo wooi Yik ஜோடி 21-18, 9-21. 21-16 என்ற புள்ளிக் கணக்கில் இந்தோனேசியாவின் Leo Rolly Carnando – Daniel Marthin ஜோடியை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றனர்.

Sharing is caring!