உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பிஷன்ஷிப்-ல் இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கான பரிசுத் தொகை

பரிசுத் தொகை பற்றி தகவல்…வரும் வெள்ளிக்கிழமை அன்று உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.

இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 11.71 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைக்கும். அதே போல இரண்டாம் இடம் (ரன்னர் அப்) பிடிக்கும் அணிக்கு 5.8 கோடி ரூபாய் கிடைக்கும். மேலும் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ள ஆஸ்திரேலியா (3.3 கோடி ரூபாய்), இங்கிலாந்து (2.5 கோடி ரூபாய்), பாகிஸ்தான் (1.5 கோடி ரூபாய்) மற்றும் பிற அணிகளுக்கு (தலா 73 லட்ச ரூபாய்) கிடைக்கும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

இரு அணிகளும் சாம்பியன்ஷிப் பட்டத்தை பகிர்ந்து கொண்டதாக அறிவிக்கப்பட்டால் தலா 8.78 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளதாம்.

இந்தியா கடந்த 3ஆம் தேதி இங்கிலாந்து சென்றது. நியூசிலாந்து அணி இங்கிலாந்துடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வென்ற நிலையில் இந்த இறுதி போட்டியில் விளையாட உள்ளது.

Sharing is caring!