பதக்கம் வெல்லும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு பரிசு; ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு

பயிற்சியாளர்களுக்கு பரிசு..டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு பரிசு வழங்கப்படும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்து உள்ளது.

இதன்படி, தங்கப்பதக்கத்திற்கு ரூ.12 லட்சம், வெள்ளிப்பதக்கம்-ரூ.10 லட்சம், வெண்கலப்பதக்கம்- ரூ.7.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயலர் ராஜிவ் மேத்தா கூறுகையில், டோக்கியோவில் வீரர்களுடன் இருக்கும் பயிற்சியாளர்களுக்கு பரிசு வழங்கப்படும்.

இது அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும். மீராபாயின் பயிற்சியாளர் விஜய் சர்மாவிற்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Sharing is caring!