இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்ககாரா வெளியிட்ட பதிவு

இலங்கை கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்று 25 ஆண்டுகள் ஆன நிலையில் அது குறித்து குமார் சங்ககாரா பதிவிட்டுள்ளார்.

கடந்த 1996ஆம் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இலங்கை அணி வென்று சாதனை படைத்தது.

அந்த வரலாற்று நிகழ்வு நடந்து நேற்றுடன் 25 ஆண்டுகள் ஆகியுள்ளது.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா டுவிட்டரில், அது நாட்டையே உற்சாகத்தில் ஆழ்த்திய வெற்றியாக இருந்தது.

அது தான், ஒருநாள் நாட்டுக்காக விளையாடுவேன் என்ற கற்பனையை செய்ய என்னை தூண்டியது என பதிவிட்டுள்ளார்.

Sharing is caring!