கொரோனாவிலிருந்து குணமடைந்து அணியினருடன் இணைந்தார் ரிஷப் பந்த்

கொரோனாவிலிருந்து குணமடைந்தார்… கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் இருந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், குணமடைந்து மீண்டும் அணியினருடன் இணைந்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு நடைபெறும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி தொடங்குகிறது.

இதனிடையே, ரிஷப் பந்த்-க்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அவர் தனிமைபடுத்தலில் இருந்து வந்தார்.

இதனையடுத்து மீண்டும் எடுக்கப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளதால் இந்திய அணியினருடன் மீண்டும் இணைந்துள்ள ரிஷப் பந்த் வருகிற 28 ஆம் தேதி டர்ஹாமில் நடைபெறும் இரண்டாவது பயிற்சிப் போட்டியில் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகியது.

Sharing is caring!