கண் இமைக்கும் நேரத்தில் எடுத்த ரன் அவுட்! ஒட்டு மொத்த ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த இளம்வீரர்

டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ரன் அவுட்டான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரின் 7-வது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்த நிலையில் ரியான் பராக் வீசிய 13-வது ஓவரின் 4-வது பந்தை லான் ஆஃப் திசையில் ரிஷப் பந்த் அடித்தார்.

ஆனால் பந்து ரியான் பராக்கின் கைக்கு சென்றது. அப்போது ரிஷப் பந்த் ரன் எடுக்க ஓடி வந்தார். உடனே கண் இமைக்கும் நேரத்தில் ஸ்டம்பை நோக்கி வீசி ரிஷப் பந்தை அவர் ரன் அவுட்செய்தார்

Sharing is caring!