சபாவை வீழ்த்தியது பி.ஜே சிட்டி அணி

கோத்தா கினபாலு, மார்ச் 14 –  சூப்பர் லீக் காற்பந்து போட்டியில்  நேற்றிரவு  லீக்கஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில்  பி.ஜே. சிட்டி 1- 0  கோல் கணக்கில்  சபா குழுவை வென்றது.பயிற்சியாளர்  பி.மணியம் தலைமையிலான   பி.ஜே சிட்ட்டி குழுவிற்கான  வெற்றி கோலை ஆட்டத்தின்  51ஆவது நிமிடத்தில் டேரன் லோக் அடித்தார்.

கேப்டன் குருசாமி  தலைமையிலான   பி.ஜே சிட்டி  அணி  இந்த வெற்றியின் மூலம் தற்போது  5 புள்ளிகளை பெற்றுள்ளது.

அடுத்து  இம்மாதம் 17 ஆம் தேதி கெடா குழுவுடன் மோதவிருக்கிறது.  அந்த ஆட்டம் அலோஸ்டாரில் நடைபெறும்.இதனிடையே, செலயாங் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில்  சிலாங்கூர் எப்.சி 1-1 கோல் கணக்கில்  கோலாலம்பூர் சிட்டி குழுவுடன் சமநிலைக் கண்டது. இந்த இரண்டாவது வெற்றியினால் சிலாங்கூர் தற்போது  6 புள்ளிகளை பெற்றுள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் மலாக்காவும்  பகாங்கும் கோல் எதுவுமின்றி சமநிலைக் கண்டன.இதனிடையே இன்று  மாலைநடைபெற்ற பிரிமியர் லீக்காற்பந்து போட்டியன் முடிவுகள்நெகிரி செம்பிலான்  2 x திரெங்கானு  2கிளந்தான் யுனைடெட்  2 x  பேரா 1J.D.T   3   x கூச்சிங் சிட்டி 1கிளந்தான் எப்.சி 2  x  பி.டி.ஆர்.எம்  1

Sharing is caring!