தோல்வியடைந்ததால் அழுது கொண்டே வெளியேறிய செரீனா வில்லியம்ஸ்

அரையிறுதிப் போட்டியில் தோல்வி… ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த செரீனா வில்லியம்ஸ் கண்ணீர் விட்டு அழுதுகொண்டே வெளியேறிவிட்டார்.

டென்னிஸ் போட்டிகளில் 23 முறை ஒற்றையர் பட்டங்களை வென்ற செரீனா வில்லியம்ஸ் 24ஆவது முறையாகப் பட்டம் வென்று மார்கரட் கோர்ட்டின் சாதனையைச் சமன் செய்ய நினைத்திருந்தார்.

இன்றைய தோல்வியால் தனது எண்ணம் நிறைவேறாமல் போனதால் பேட்டியளிக்கும்போது, ஆட்டத்தில் தான் பல தவறுகளைச் செய்துவிட்டதாகவும் இன்று பெரிய தவறைச் செய்துவிட்டதாகவும் கூறிக் கண்ணீர் விட்டு அழுதபடியே வெளியேறிவிட்டார்.

Sharing is caring!