இலங்கையுடான டெஸ்ட் தொடரை தவிர்த்தார் ஷகிப் அல்ஹசன்

2021 ஐ.பி.எல். தொடரில் கவனம் செலுத்தியுள்ளதனால் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஷகிப் அல்ஹசன், ஏப்ரல் மாதம்  நடைபெறவுள்ள இலங்கையுடனான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தவிர்த்துள்ளார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் செயல்பாட்டுத் தலைவர் அக்ரம் கான் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும் இலங்கையுடனான டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் பங்கெடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க விரும்புவதால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரைத் தவிர்க்கும்படி அவர் (ஷகிப்) சமீபத்தில் எங்களுக்கு ஒரு கடிதம் கொடுத்துள்ளார் எனவும் அக்ரம் கூறியுள்ளார்.

விளையாட விருப்பமில்லாத ஒருவரை (தேசிய அணிக்கான டெஸ்ட்) போட்டியில் களமிறங்க வைப்பதில் அர்த்தமில்லை என்பதனால் நாங்கள் அவருக்கு ஐ.பி.எல்.லில் கவனம் செலுத்த அனுமதி வழங்கினோம் என்றும்  அக்ரம் மேலும் தெரிவித்துள்ளார்

Sharing is caring!