டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை

பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை… வரும் ஜூலை 23 தொடங்கி ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்து அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முடிவை எடுத்து உள்ளதாகவும் கமிட்டி விளக்கம் கொடுத்துள்ளது. கடந்த 2020 இல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஒலிம்பிக் கொரோனா நோய் தொற்று பரவலினால் நடப்பபாண்டுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் இந்த முடிவை கமிட்டி எடுத்துள்ளது. தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

Sharing is caring!