வங்கதேச அணிக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு!

வங்க தேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்க தேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி Pallekele மைதானத்தில் ஏப்ரல் 21ம் திகதி தொடங்குகிறது. 2வது டெஸ்ட் போட்டி ஏப்ரல் 29ம் திகதி அதே மைதானத்தில் நடக்கவிருக்கிறது.

இந்நிலையில், வங்க தேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 18 வீரர்கள் அடங்கிய பட்டியலை இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ளது.

திமுத் கருணாரத்ன (கேப்டன்), லஹிரு திரிமான்ன, ஓசத பெர்னாண்டோ, பாத்தூம் நிசங்கா, தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மேத்யூஸ், ரோஷென் சில்வா, தனஞ்சய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல, தசுன் சானக்க, வனிந்து ஹசரங்க, ரமேஷ் மெண்டீஸ், சுரங்கா லக்மல், விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார, அசித பெர்னாண்டோ, தில்ஷான் மதுசங்க, பிரவின் ஜெயவிக்ரமா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!