ராகுல் டிராவிட்டிடம் ஆலோசனை பெற்ற இலங்கை கேப்டன் ஷனகா

இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் இலங்கை கேப்டன் ஷனகா உரையாடி ஆலோசனைகளைப் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரை இந்திய அணி வென்றுள்ளது.

இந்தியாவின் பி டீம் என சொல்லப்பட்ட ஷிகார் தவான் தலைமையிலான அணி இலங்கையில் ருத்ர தாண்டவம் ஆடி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்தது முக்கியக் காரணம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மூன்றாவது போட்டிக்குப் பிறகு இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் இலங்கை கேப்டன் ஷனகா உரையாடி ஆலோசனைகளைப் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக இணையத்தில் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

Sharing is caring!