இக்கட்டான சூழ்நிலையில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம்… இந்தியாவிடம் வைத்த வேண்டுகோள்! சம்மதிப்பாரா கங்குலி?

கொரோனா காலக்கட்டத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியம் நிதி சிக்கலில் தவித்து வரும் நிலையில், பிசிசிஐ-யிடம் அதை சமாளிப்பதற்காக வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பல நாடுகளில் நடத்தப்படவிருந்த கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டது மற்றும் ஒரு சில நாடுகளில் தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. அந்த வகையில், இந்திய அணி கடந்த ஆண்டு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட வேண்டியிருந்தது.

கொரோனா காரணமாக தொடர் ஒத்தி வைக்கப்பட்டு, இந்தாண்டு வரும் ஜுலை மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான இளம் இந்திய அணி தயாராக உள்ளது. விரைவில் இலங்கை அணி இந்த தொடரில் விளையாடும் தங்கள் நாட்டுகள் வீரர்களின் பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் நிர்வாகம், கொரோன பரவல் காரணமாக போதிய அளவு போட்டிகள் நடத்தப்படாததால், நிதி சிக்கலில் தவித்து வருகிறது. இதனால் அதை ஈடு செய்யும் வகையில், இலங்கை வரும் இந்திய அணியிடம் இன்னும் இரண்டோ அல்லது அதற்கு மேல் உள்ள போட்டிகளிலோ கலந்து கொள்ள வேண்டும். அப்படி கூடுதலாக விளையாடும் போட்டியின் மூலம் கிடைக்கும் தொலைக்காட்சி உரிமை வருமானத்தை நாங்கள் பெற முடியும் என்று கூறியுள்ளது.

இதை பிசிசிஐ-யும் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது பிசிசிஐ-யின் தலைவரான கங்குலி இதை ஏற்பாரா அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என்று பார்ப்போம்.

மேலும், இதே போல் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம், இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்க அணி ஆகஸ்ட் மாதம், ஸ்காட்லாந்து அணி செப்டம்பர் மாதமும், ஆப்கானிஸ்தான் அணி நவம்பர் மாதம் இலங்கை வரவுள்ளதால் அந்த தொடரிலும் கூடுதல் போட்டியில் விளையாட அவர்களை கேட்டுக் கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Sharing is caring!