அழகான புகைப்படத்தை வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர்

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தினேஷ் சண்டிமால் தனது குடும்பத்தாருடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணிக்காக 149 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3698 ரன்களை குவித்துள்ளவர் சண்டிமால்.

இவர் 62 டெஸ்ட் போட்டிகளிலும், 57 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும் சேர்த்து மொத்தமாக 15 சதங்களை அவர் விளாசியுள்ளார்.

இந்த நிலையில் தனது குடும்பத்தாருடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை சண்டிமால் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில், நான் என் குடும்பத்தாருடன் என பதிவிட்டு, எல்லோரும் பத்திரமாக வீட்டில் இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

Sharing is caring!