சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் பிரபல வீரர் அறிவிப்பு!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணி வீரர் தமிகா பிரசாத் அறிவித்துள்ளார்.

37 வயதான பிரசாத் 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

அதே போல 24 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார்.

இதோடு 276 முதல் தர போட்டிகளில் பிரசாத் விளையாடியுள்ளார். அவர் கடைசியாக இலங்கை அணிக்காக 2015ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

இதன்பின்னர் கடுமையான தோள்பட்டை காயத்தால் பாதிக்கப்பட்ட பிரசாத்துக்கு அதுவே கிரிக்கெட் விளையாட தடையாக அமைந்தது.

சிகிச்சையைத் தொடர்ந்து முதல் தர போட்டிகளில் மறுபிரவேசம் செய்தார், ஆனால் தேசிய அணியில் மீண்டும் நுழைய முடியவில்லை.

இந்த நிலையில் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பிரசாத் ஓய்வு பெறுகிறார்.

Sharing is caring!