2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை நடுவராக இலங்கை பெண்

இலங்கைக்கு ஒரு வரலாற்று தருணத்தை குறிக்கும் வகையில், 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பணியாற்றுவதற்காக ஸ்ரீலங்கா பெண் பொலிஸ் அதிகாரி குத்துச்சண்டை நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று இலங்கை பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி ஜப்பானின் டோக்கியோவில் தொடங்கவுள்ள 2020 ஒலிம்பிக் போட்டியில் ஸ்ரீலங்கா பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பெண் தலைமை ஆய்வாளர் டி.நெல்கா ஷிரோமலா என்பவரே குத்துச்சண்டை நடுவராக பங்கேற்க உள்ளார்.

காலியின் ரிப்பன் பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த இவர் 1997 ஆம் ஆண்டில் எஸ்.எல். பொலிஸில் பயிற்சி சப் இன்ஸ்பெக்டராக இணைந்துள்ளார்.

Sharing is caring!