உலகக்கோப்பை தொடரில் டோனி இந்திய அணி ஆலோசகராக நியமிக்கப்பட்டதில் திடீர் சிக்கல்!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டது குறித்து ஜாம்பவான் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் 17ஆம் திகதி தொடங்கவுள்ளது. இதற்கான இந்திய அணி ஆலோசகராக முன்னாள் கேப்டன் டோனி நியமிக்கப்பட்டுள்ளார். டோனியை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு தான் ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் இவரை மீண்டும் அணிக்கு அழைத்தது சரியல்ல என விமர்சனம் எழுந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய பிரதேச கிரிக்கெட் சங்க உறுப்பினர் சஞ்சீவ் குப்தா, டோனி சென்னை அணி கேப்டனாக இருப்பதால், ஆதாயம் தரும் வகையில் இரட்டை பதவி வகிக்கக் கூடாது என இந்திய கிரிக்கெட் போர்டுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதனால் ஆலோசகராவதில் சிக்கல் நீடிக்கிறது. இருப்பினும் டோனி நியமனத்தை வரவேற்றுள்ளார் முன்னாள் கேப்டன் கபில் தேவ்.

இந்தியாவுக்கு முதல் உலக கோப்பை (1983) வென்ற அவர் கூறுகையில், ஓய்வு பெற்ற வீரர்கள் குறைந்தது மூன்று அல்லது நான்கு ஆண்டுக்குப் பின் தான் மீண்டும் கிரிக்கெட் பக்கம் திரும்ப வரவேண்டும் என்பது பொதுவாக எனது கருத்து.

ஆனால் உலக கோப்பை தொடர் வரவுள்ள நிலையில் இது ஸ்பெஷலானது. தவிர பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், டோனியை ஆலோசகராக நியமித்தது சரியானது முடிவு என கூறியுள்ளார்.

Sharing is caring!