சூப்பர் லீக் காற்பந்து போட்டி; J.D.T அணியின் அதிரடி தொடர்கிறது

ஷா ஆலாம், மார்ச் 14 – சூப்பர் லீக் காற்பந்து போட்டியில் ஜோகூரின் JDT அணி இதுவரை தான் விளையாடிய  மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தற்போது  9 புள்ளிகளுடன்  முதல்  இடத்தில் உள்ளது.

கொன்ஷாலோ  கெப்ராரா,  பெர்க்சன் டெ சில்வா போன்ற பல்வேறு வெளிநாட்டு நட்சத்திர ஆட்டக்கார்ர்களைக் கொண்டுள்ள J.D.T அணி நேற்றிரவு ஷா அலாமில் நடைபெற்ற ஆட்டத்த்தில் எதிர்பார்க்கப்ட்டதைவிட எளிதாக  4-1 என்ற கோல் கணக்கில் யு.ஐ.டி.எம் (UITM)  குழுவை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் அரிப் அய்மான், ஹனாப்பி,  கொன்ஷாலோ, பெர்க்சன் டெ சில்வா,  ஷமிர் குட்டி ஆகியோர் கோல்அடித்தனர்.  JDT இவ்வாண்டு சூப்பர் லீக் காற்பந்து போட்டியில்   இடம்பெற்று  12 குழுக்களில் இதுவரை  8 கோல்களை  அடித்துள்ளது.

Sharing is caring!