T20 உலகக் கிண்ணத்திற்கான போட்டி அட்டவணை

அவுஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்திற்கான போட்டி அட்டவணையை ICC இன்று வெளியிட்டது.

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியை ICC 2007 இல் அறிமுகப்படுத்தியது. அறிமுக உலகக்கிண்ண போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 20 ஓவர் உலகக்கிண்ண போட்டி நடைபெற்று வருகிறது. 2009 இல் பாகிஸ்தானும், 2010 இல் இங்கிலாந்தும், 2012 இல் மேற்கிந்தியத் தீவுகளும் 2014 இல் இலங்கையும் 2016 இல் மேற்கிந்தியத் தீவுகளும் உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றின.

7 ஆவது T20 உலகக்கிண்ண போட்டி அவுஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு (2020) ஒக்டோபர் 18 ஆம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று வெளியிட்டுள்ளது.

ICC தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. 9 ஆவது மற்றும் 10 ஆவது இடங்களில் உள்ள இலங்கை, பங்களாதேஷ் மற்றும் 6 இதர அணிகள் தகுதிச் சுற்றில் விளையாட வேண்டும். இதில் இருந்து 4 அணிகள் தகுதி பெறும்.

தரவரிசையில் முதல் 2 இடங்களில் இருப்பதால் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெறவில்லை. இரண்டு பிரிவிலும் இடம்பெற்றுள்ள அணிகள் வருமாறு:-

A பிரிவு: பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து, தகுதி பெறும் அணிகள்.

B பிரிவு: இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், தகுதி பெறும் அணிகள்.

20 ஓவர் உலகக்கிண்ணத்தில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.

 

Full Schedule for 2020 Men’s T20 World Cup

18th October: Sri Lanka vs Qualifier A3

18th October: Qualifier A2 vs Qualifier A4

19th October: Bangladesh vs Qualifier B3

19th October: Qualifier B2 vs Qualifier B4

20th October: Qualifier A3 vs Qualifier A4

20th October: Sri Lanka vs Qualifier A2

21st October: Qualifier B3 vs Qualifier B4

21st October: Bangladesh vs Qualifier B2

22nd October: Qualifier A2 vs Qualifier A3

22nd October: Sri Lanka vs Qualifier A4

23rd October: Qualifier B2 vs Qualifier B3

23rd October: Bangladesh vs Qualifier B4

24th October: Australia vs Pakistan

24th October: India vs South Africa

25th October: A1 vs B2

25th October: New Zealand vs West Indies

26th October: Afghanistan vs A2

26th October: England vs B1

27th October: New Zealand vs B2

28th October: Afghanistan vs B1

28th October: Australia vs West Indies

29th October: Pakistan vs A1

29th October: India vs A2

30th October: England vs South Africa

30th October: West Indies vs B2

31st October: Pakistan vs New Zealand

31st October: Australia vs A1

1st November: South Africa vs Afghanistan

1st November: India vs England

2nd November: A2 vs B1

2nd November: New Zealand vs A1

3rd November: Pakistan vs West Indies

3rd November: Australia vs B2

4th November: England vs Afghanistan

5th November: South Africa vs A2

5th November: India vs B1

6th November: Pakistan vs B2

6th November: Australia vs New Zealand

7th November: England vs A2

7th November: West Indies vs A1

8th November: South Africa vs B1

8th November: India vs Afghanistan

11th November: Semifinal 1

12th November: Semifinal 2

15th November: Final

Sharing is caring!