T20 உலகக் கிண்ணம் இந்தியாவுக்கா? அவுஸ்திரேலியாவுக்கா?

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்கள் டி20 உலகக் கிண்ண தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி அவுஸ்திரேலியாவுடன் மோதவுள்ளது.

வரும் ஞாயிறுக்கிழமை மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடக்கவுள்ளது.

நேற்று நடைபெற்ற 2 வது இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை 5 ஓட்டங்கள் வித்தியாசத்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது அவுஸ்திரேலிய அணி.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்கள் எடுத்தது.

மழை காரணமாக, டிஎல்எஸ் முறைப்படி 13 ஓவர்களில் 98 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்று வெற்றி இலக்கு குறைக்கப்பட்டது.

ஆனால் 13 வது ஓவர் வரை தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகளை இழந்து 92 ஓட்டங்கள் மட்டுமே இழந்தது.

இதேவேளை அரை இறுதியில் விளையாடாமலேயே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி.

Sharing is caring!