இலங்கை தேசிய மற்றும் லெஜண்ட்ஸ் அணிகளுக்கிடையேயான டி-20 போட்டி ஏப்ரலில்?

இலங்கை தேசிய மற்றும் இலங்கை லெஜண்ட்ஸ் அணிகளுக்கிடையே ஒரு ஒருநாள் டி-20 கிரிக்கெட் போட்டியை ஏப்ரல் மாதம் நடத்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ முன்மொழிந்துள்ளார்.

தற்போது மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை தேசிய அணியின் வருகையைத் தொடர்ந்து இப் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த போட்டி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் அதன் மொத்த பார்வையாளர்கள் செயல் திறனில் 50 சதவீதமானோருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும்.

இப் போட்டியின் மூலம் திரட்டப்படும் நிதியானது கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும்.

லெஜண்ட்ஸ் அணியை யார் வழிநடத்துவார்கள் என்பது இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், தசுன் ஷானகா இலங்கை தேசிய அணியின் தலைவராக இருப்பார்.

எவ்வாறெனினும் இது தொடர்பான இறுதி தீர்மானங்களை இலங்கை கிரக்கெட் நிர்வாகம் விளையாட்டுத்துறை அமைச்சருடன் மேற்கொள்ளும் கலந்துரையாடல்களின் பின்னர் உறுதி செய்யும்

இதற்கிடையில் 2021 வீதி பாதுகாப்பு டி-20 உலக சம்பியன்ஷிப் போட்டியில், இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியானது தென்னாபிரிக்க லெஜண்ட்ஸ் அணியை எதிர்கொள்ளும்.

Sharing is caring!