இலங்கைக்கு எதிரான டி20 தொடர்! எந்த இடத்திலும் இறங்கி அடித்து நொறுக்க தயார்: கெயில் உறுதி!

இலங்கை அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடுவதற்காக, மேற்கிந்திய தீவு அணியில் இடம் பிடித்துள்ள கெய்ல், எந்த இடத்திலும் இறங்கி அடிக்க தயார் என்று ஓபன் ஸ்டெட்மேண்ட் கொடுத்துள்ளார்.

மேற்கிந்திய தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என விளையாடவுள்ளது.

முதலில் டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்த டி20 தொடருக்கான மேற்கிந்திய தீவு அணியில் அனுபவம் வாய்ந்த அதிரடி மன்னன் கெய்லுக்கு(42) வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் மற்றும் பாகிஸ்தான் டி20 லீக் தொடரில் சிறப்பாக விளையாடியதால், அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

Sharing is caring!