உலகக் கோப்பை ஹாக்கி போட்டி பயிற்சி முகாமில் கலந்து கொள்ள தமிழக இளம் வீரர் தேர்வு

ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய ஹாக்கி அணியின் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள இளம் தமிழக வீரர் மாரீஸ்வரன் சக்திவேல் தகுதி பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 20 வயது இளம் ஹாக்கி வீரரான மாரீஸ்வரன் சக்திவேல், கடந்த ஆண்டு நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் பயிற்சி முகாமிற்கு தேர்வானார்.

அவர் பயிற்சி பெறத் தேவையான உபகரணங்களை வழங்கி ஊக்கப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, FIH ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான பயிற்சி முகாமுக்குத் தேர்வாகி இருக்கும் மாரீஸ்வரன் சக்திவேலை நேரில் சென்று பாராட்டினார்.

Sharing is caring!