தஞ்சை தொகுதி திமுக வேட்பாளர் டி.கே.ஜி.நீலமேகம் தீவிர வாக்குகள் சேகரிப்பு

தஞ்சை சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பளார் டி.கே.ஜி.நீலமேகம் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சிலநாட்களே உள்ளது. இந்நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதில் தஞ்சை தொகுதி திமுக வேட்பாளர் டி.கே.ஜி.நீலமேகம் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தினமும் காலை முதல் இரவு வரை தஞ்சை தொகுதிக்கு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சென்று வாக்குகள் சேகரித்து வருகிறார்.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்கள் பற்றி விளக்கி கூறி வாக்குகள் சேகரித்து வருகிறார். திமுக வேட்பாளர் டி.கே.ஜி.நீலமேகத்திற்கு பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் கரந்தை பகுதி சுங்கான்திடல், பூக்குளம், பள்ளியக்ரஹாரம், வடக்குவாசல், கங்கா நகர், அன்பழகன் நகர் மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார். அவருடன் திமுக நகர துணைச் செயலாளர் சிந்தனைச் செல்வன், வார்டு செயலாளர்கள் டி.எஸ். கார்த்திகேயன், ரேவதி கார்த்திகேயன், பாலு ராஜாங்கம், ஜெகன், பிரதிநிதி அண்ணா பிரகாஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்றனர்.

Sharing is caring!