இலங்கை எதிர் மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் வெற்றி தோல்வியின்றி நிறைவு…. முக்கிய தகவல்

இலங்கை அணிக்கும், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியும் வெற்றிதோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளின் நோர்த் சவுண்டில் கடந்த 29ஆம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய, மேற்கிந்தியத் தீவுகள் அணி, 354 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இதையடுத்து, தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி, 258 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

பின்னர், தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 4 விக்கட்டுக்களை இழந்து 280 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இதையடுத்து, 377 என்ற வெற்றி இலக்கை நோக்கி, நேற்றைய இறுதி நாளில் தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி, 2 விக்கட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், போட்டி வெற்றிதோல்வியின்றி நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதலாவது போட்டியும் வெற்றிதோல்வியின்றி நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!