இங்கிலாந்தை திணறடித்த தமிழன அஸ்வின்!டெஸ்ட் போட்டியில் அவர் படைத்த மிகப் பெரிய சாதனை

இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விக்கெட்டுகள் எடுத்தன் மூலம், தமிழக வீரரான அஸ்வின் சர்வதேச அளவில் 400-விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, அகமதாபாத்தில் கடந்த 24-ஆம் திகதி நடைபெற்றது.

இப்போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்று முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் மொத்தமாக 9 விக்கெட் எடுத்த அஸ்வின் இரண்டாவது போட்டியில் 8 விக்கெட் எடுத்தார். இதன் மூலம் இரண்டு போட்டிகளில் அஸ்வின் 17 விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், நான்கு விக்கெட்டுகள் வீழ்த்திய அவர் சர்வதேச அளவில் 400 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

தற்போது சர்வதேச அளவில் டெஸ்ட் தொடரில் அஸ்வின் 401 டெஸ்ட் விக்கெட், 603 சர்வதேச விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தி இருக்கிறார் . இதுவரை கும்ப்ளே 619. கபில் தேவ் 434, ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.

அஸ்வின் இதே சாதனையை படைக்க வாய்ப்புள்ளது.

சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் முரளிதரன் 800 விக்கெட் எடுத்துள்ளார்.ஷேன் வார்னே 708 விக்கெட் எடுத்துள்ளார். அஸ்வின் இதே பார்மில் சென்றால் இவர்களின் சாதனைகளை இன்னும் சில வருடங்களில் முறியடிக்க வாய்ப்புள்ளது.

Sharing is caring!