உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரித்தானிய வீராங்கனை..!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அறிமுக வீராங்கனை, பிரித்தானியாவின் Emma Raducanu கிண்ணத்தை வென்றுள்ளார்.

44 ஆண்டுகளில் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் வெல்லும் முதல் பிரித்தானிய பெண் என்ற பெருமையையும் 18 வயதேயான Emma Raducanu கைப்பற்றியுள்ளார்.

கனேடியரான லேலா பெர்னாண்டஸ் என்பவரை எதிர்கொண்ட எம்மா 6-4 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளார்.

மேலும், அறிமுகமான போட்டியிலேயே டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் வென்றுள்ளது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது.

Sharing is caring!