விம்பிள்டன் டென்னிசில் ஒரு போட்டியில் அனைத்து வீரர்களும் இந்தியர்களாக இருந்த நிகழ்வு

அனைத்து வீரர்களும் இந்தியர்கள்… விம்பிள்டன் டென்னிசில் முதன் முறையாக ஒரு போட்டியில் அனைத்து வீரர்களும் இந்தியர்களாகவே இருந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – சானியா மிர்சா ஜோடி மற்றொரு இந்திய ஜோடியான ராம்குமார் – அங்கிதா ரெய்னா ஜோடியை எதிர்த்து விளையாடியது.

இதில் 6 – 2, 7 – 6 என்ற செட் கணக்கில் அனுபவம் வாய்ந்த போபண்ணா – சானியா மிர்சா ஜோடி வெற்றி பெற்றது. பெண்கள் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் பெத்தானி மேட்டக் – சானியா மிர்சா ஜோடி 2ஆவது சுற்றுக்கு முன்னேறியது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா – திவிஜ் ஷரண் ஜோடி ஏற்கெனவே முதல் சுற்றில் தோற்று வெளியேறி இருந்தது.

Sharing is caring!