மாரியப்பன் சாதனையால் தேசம் பெருமை கொள்கிறது: பிரதமர் மோடி டுவிட்

வெண்கலப் பதக்கம் வென்ற சரத்குமாருக்கும் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் மாரியப்பன் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் டி63 போட்டியில் இறுதியாக அமெரிக்க வீரர் சாம் கிரீவ் – மாரியப்பன் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. 1.88 மீ. உயரம் உயரம் தாண்டி அமெரிக்க வீரர் சாம் கிரீவ் தங்கம் வென்றார்.

இதையடுத்து 1.86 மீ. உயரம் தாண்டிய இந்திய வீரர் மாரியப்பனுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. மற்றொரு இந்திய வீரரான சரத்குமார் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்திய மாரியப்பனுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு வாழ்த்துக்கள். மாரியப்பன் சாதனையால் தேசம் பெருமை கொள்கிறது” எனப்பதிவிட்டுள்ளார்.

வெண்கலப் பதக்கம் வென்ற சரத்குமாருக்கும் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

Sharing is caring!