பாகிஸ்தானை வீழ்த்திய சந்தோஷத்தில்… வித்தியாசமாக வெற்றியை கொண்டாடிய வீரர்! வைரலாகும் வீடியோ

பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்ற நிலையில், அந்தணி வீரர் லுக் ஜோங்குவிஸ் வெற்றியை கொண்டாடிய விதம் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் ஜிம்பாப்வே அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை ஜிம்பாப்வே வீழ்த்தியதால், அந்தணிக்கு பாரட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்தியவுடன், ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சாளர் Luke Jongwe’s தான் போட்டியிருந்த ஷுவை எடுத்து யாருக்கோ போன் செய்வது போல் வித்தியாசமாக செய்கை செய்து வெற்றியை கொண்டாடினார்.இதைக் கண்ட சக வீரர்கள் அவரை தூக்கி கொண்டாடினர். ஏனெனில் Luke Jongwe’s இப்போட்டியில், 3.5 ஓவரில் 18 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து, 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ஜிம்பாப்வே அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!