ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட தொடர்

அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட தொடர்… 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட தொடராக இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் சாதனை படைத்துள்ளது.

2019-இல் நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் மொத்தம் 57 சிக்ஸர்கள் விளாசப்பட்டன. இந்த சாதனை இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் முறியடிக்கப்பட்டது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங்கின்போது 7-வது சிக்ஸரை விளாசியபோதே அதிக சிக்ஸர்கள் விளாசப்பட்ட 3 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடராக இந்தியா, இங்கிலாந்து தொடர் சாதனை படைத்துவிட்டது.

இந்திய அணியின் இன்னிங்ஸில் மொத்தம் 11 சிக்ஸர்கள் விளாசப்பட்டன. இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. எனவே, அதிக சிக்ஸர்கள் சாதனையை இந்த தொடர் மிகப் பெரிய வித்தியாசத்திலேயே முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் 3-வது இடத்திலும் மற்றுமொரு இந்தியா, இங்கிலாந்து தொடர் உள்ளது. 2017-இல் நடைபெற்ற இருஅணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 56 சிக்ஸர்கள் விளாசப்பட்டன.

Sharing is caring!