எங்கள் அணியில் இதை செய்யக்கூடிய பேட்ஸ்மேன்கள் இல்லை! கவலை தெரிவித்த ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்

அவுஸ்திரேலிய அணியில் ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யும் பேட்ஸ்மேன்கள் இல்லை என ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கவலை தெரிவித்துள்ளார்.

இன்னும் சில மாதங்களில் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி வரவுள்ளது. இந்த நிலையில் அவுஸ்திரேலிய அணி குறித்து அந்த நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில், ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யக்கூடிய பேட்ஸ்மேன்கள் இல்லை என்பது தான் ஆஸ்திரேலிய அணியில் எப்போதும் கவலைதரும் அம்சமாகும்.

இந்த வரிசை மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தது. அதாவது அணியின் வெற்றிக்கு 3-4 ஓவர்களில் 50 ரன்கள் தேவை என்ற நிலையில் களம் இறங்கி அந்த இலக்கை அடையச் செய்யும் கடினமான பணியாகும்.

அவுஸ்திரேலிய அணியில் இத்தகைய தரமான ஆட்டக்காரர்கள் இல்லாமல் போனதற்கு முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட்டில் டாப்-4 இடத்தில் இறங்குவது தான் காரணம்.

பின்வரிசையில் எந்த வீரரும் தொடர்ச்சியாக களம் காண்பதில்லை. அந்த இடத்திற்கு சரியான வீரரை கண்டறிய வேண்டியது அவசியமாகும். என கூறியுள்ளார்.

Sharing is caring!