சென்னை அணியின் தோல்விக்கு இவர்களே காரணம்!

டெல்லி அணிக்கெதிரான தோல்வி குறித்து சென்னை அணியின் தலைவரான டோனி விளக்கமளித்துள்ளார்.

மும்பையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில், டோனி தலைமையிலான சென்னை அணியும், ரிஷப் பாண்ட் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

இப்போட்டியில் சென்னை அணி நிர்ணயித்த 188 ஓட்டங்களை டெல்லி அணி அசால்ட்டாக எட்டிப்பிடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் சென்னை அணியின் தோல்விக்கு பந்து வீச்சாளர்களே காரணம் என்று கூறியுள்ளார். அவர் நேற்று போட்டி முடிந்த பின் கூறுகையில், இந்த போட்டியில் பனிப்பொழிவு ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நினைத்திருந்தோம். அதன்படி பேட்டிங்கில் முடிந்தளவு நாங்கள் அதிகமான ரன்களை அடிக்க ஆசைப்பட்டோம்.

அதைப்போன்றே எங்களது பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடி 188 ரன்களை குவித்தனர். ஆனால் எங்களது வீரர்களால் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட முடியவில்லை இனிவரும் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் தங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்த வேண்டும்.

இந்த போட்டியில் இன்னும் 15 முதல் 20 ரன்கள் அதிகமாக அடித்து இருந்தால் நாங்கள் சாதகமான நிலையில் இருத்திருப்போம்.

இதுபோன்ற மைதானங்களில் 200 ரன்கள் இலக்கு என்பதுதான் சரியானதாக இருக்கும். டெல்லி அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். இந்த போட்டியில் எங்களது தோல்விக்கு காரணம் முழுமையாக பந்துவீச்சையே சேரும் என கூறியுள்ளார்.

Sharing is caring!