ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை விளாசிய திசர பெரேரா..!!

இலங்கை கிரிக்கெட்டின் அனுசரணையில் நேற்று நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆர்மி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக  திசாரா பெரேரா ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்துள்ளார்.

ப்ளூம்ஃபீல்ட் ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது தில்ஹான் கூரேயின் பந்துப் பரிமாற்றத்தில் அவர் இந்த திறனை வெளிப்படுத்தியுள்ளார்.

உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டியில் இதுபோன்ற ஒரு சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையைப் அவர் பெற்றார்.

அது மாத்திரமன்றி உலகின் முதல்தர கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்த ஒன்பதாவது வீரரனும் ஆனார் திசர பெரேரா.

சர் கார்பீல்ட் சோபர்ஸ், ரவி சாஸ்திரி, ஹெர்ஷல் கிப்ஸ், யுவராஜ் சிங், ரோஸ் விட்டல், ஹஸ்ரத்துல்லா சசாய், லியோ கார்ட்டர் மற்றும் கிரண் பொல்லார்ட் ஆகியோர் கடந்த காலத்தில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்த பேட்ஸ்மேன்கள் ஆவர்.

இதேவேளை இப் போட்டியில் திசர பெரேரா 12 பந்துகளில் எட்டு சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்தார்.

Sharing is caring!