சென்னைக்கு சவால் விடும் அந்த 3 அணிகள்..!!

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 3 அணிகளை எதிர்கொள்வது கடும் சவாலாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9ம் திகதி சென்னையில் தொடங்கவுள்ளது, இதற்கான ஆயத்த பணிகளில் அனைத்து அணிகளும் இறங்கியுள்ளன.

இந்த நிலையில் டோனி தலைமையிலான சென்னை அணிக்கு 3 அணிகள் கடும் சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.

ராஜஸ்தான்

ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் சங்ககாரா சிறப்பு ஆலோசகராக உள்ளதால் சிவம் தூபே, கிறிஸ் மோரிஸ், முஸ்டிவிஸுர் ரஹ்மான் ஆகியோர் புதிதாக அணிக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

துவக்க வீரர்களாக பென் ஸ்டோக்ஸ், பட்லர் உள்ளனர். மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சன், ரியன் பராக், சிவன் தூபே, ராகுல் தேவட்டியா உள்ளதால் 9 வது வீரர் வரை பேட்டிங் பலம் உள்ளது.

அதே போல் பவுலிங்கிலும் அனுபவ வீரர்கள் உள்ளதால் அணி வலுவாக களமிறங்குகிறது.

டெல்லி கேப்பிடல்ஸ்

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி கடந்த 2 ஆண்டுகளாக சிறந்த முறையில் ஆடி வருகிறது.

பேட்டிங்கில் ரஹானே, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ப்ரித்தீவ் ஷா, ரிஷப் பண்ட், ஸ்டீவ் ஸ்மித், ஹெட்மெயர், சாம் பில்லிங்ஸ் உள்ளனர்.

அதே போல் பவுலிங்கில் ரபாடா, அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் பலம் வாய்ந்த வீரர்களாக உள்ளனர். இதனால் கண்டிப்பாக இது சென்னை அணிக்கு சவாலாக இருக்கும்.

மும்பை இந்தியன்ஸ்

5 முறை கிண்ணம் வென்றுள்ள மும்பை அணியில் ஓப்பனிங்கில் டிகாக், ரோகித் ஜோடி சிறப்பாக உள்ளது.

அவர்களுக்கு அடுத்து கிறிஸ் லின், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், பொல்லார்ட், உள்ளனர். மிடில் ஆர்டரில் ஆல்ரவுண்டர்கள் ஹர்த்திக், க்ருணால் பெரிய பலம். கடந்த முறை அதிக ஸ்கோர் அடித்த வீரர்கள் பட்டியலில் மும்பை அணி வீரர்கள் 3 பேர் இருந்தனர்.

அதே போல பவுலிங்கில் பும்ரா, போல்ட், கோல்டர் நைல், ஆடம் மைல்ன், ராகுல் சஹார் உள்ளதால் அந்த அணி பெரும் சவாலாக விளங்கும்.

Sharing is caring!