வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு இலங்கை, இந்தியா, தென் ஆபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் லெஜென்ட்ஸ் அணிகள் தகுதி பெற்றன.

இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய லெஜென்ட்ஸ் அணிகளுக்கிடையில் நேற்றைய தினம் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

இங்கிலாந்தும், மேற்கிந்தியத் தீவுகளும் சம புள்ளிகளை பெற்றுக்கொண்டன. இங்கிலாந்து நிகர ஓட்ட வேகத்தில் முன்னிலையில் இருந்தாலும், இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றியீட்டியதால், அவ்வணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

அரை இறுதிச் சுற்றப் போட்டிகள் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள நிலையில், முதலாவது அரையிறுதிப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா லெஜென்ட்ஸ் அணியை பிறையன் லாரா தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் லெஜென்ட்ஸ் அணியை இன்றைய தினம் எதிர்த்தாடவுள்ளது.

ராய்பூரில் நடைபெறவுள்ள இப்போட்டி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இறுதிப் போட்டியில் திலகரட்ண டில்ஷான் தலைமையிலான இலங்கை லெஜென்ட்ஸ் அணி , ஜொன்டி ரோட்ஸ் தலைமையிலான தென் ஆபிரிக்க லெஜென்ட்ஸ் அணியை நாளை தினம் இரவு 7 மணிக்கு சந்திக்கவுள்ளது.

இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகள் 21 ஆம் திகதியன்று நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும்.

Sharing is caring!