முன்னாள் இலங்கை வீரர்களுடன் பலப்பரீட்சை நடாத்தும் இந்நாள் தேசிய கிரிக்கட் அணி வீரர்கள்.!! ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர்களும், தற்போதைய அணி வீரர்களும் பலப்பரீட்சை நடாத்த உள்ளனர்.

எதிர்வரும் மே மாதம் 4ம் திகதி முன்னாள் நட்சத்திர வீரர்களும், தற்போதைய அணி வீரர்களுக்கம் இடையில் கண்காட்சிப் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.

டுவன்ரி-20 போட்டியாக இந்தப் போட்டி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா கிரிக்கட் முகாமைத்துவ கமிட்டியின் தலைவர் பேராசிரியர் அர்ஜூன டி சில்வா இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் போட்டியை கண்டு களிப்பதற்கு வரையறுக்கப்பட்ட ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற லெஜன்ட்ஸ் உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!