டோக்கியோ பாராலிம்பிக் – வட்டு எறிதலில் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியாவுக்கு வெள்ளி பதக்கம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த 3-வது வெள்ளிப்பதக்கம் இதுவாகும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் போட்டியின் 7-வது நாளான இன்று, ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் கத்துனியா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். பங்கேற்ற முதல் பாராலிம்பிக் போட்டியிலேயே பதக்கம் வென்று அசத்தி உள்ளார் யோகேஷ் கத்துனியா.

டோக்கியோ பாராலிம்பிக்கில் இதுவரை இந்தியா ஒரு தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றுள்ளது.

Sharing is caring!