முதல் போட்டியிலே டோனிய ஜெயிச்சாச்சு! எப்படி இருக்கு இந்த பீல்?

சென்னை அணிக்கெதிரான போட்டியில் வெற்றி பெற்றது குறித்து, டெல்லி அணியின் இளம் கேப்டன் ரிஷப் பாண்ட் கூறியுள்ள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை அணியை, ரிஷப் பாண்ட் தலைமையிலான டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த தொடரில் முதல் முறையாக கேப்டன் பதவியை வகித்துள்ள ரிஷப் பாண்ட் இந்த அனுபவம் குறித்து போட்டி முடிந்த பின் கூறியுள்ளார்.

அதில், பந்துவீச்சின் போது மிடில் ஓவர்கள் நான் சற்று நெருக்கடிக்குள்ளானேன். ஆனால் ஆவேஷ் கானும், டாம் கர்ரானும் மிடில் ஓவர்களில் மிக சிறப்பாக செயல்பட்டு சென்னை அணியை 188 ஓட்டங்களில் கட்டுப்படுத்தி விட்டனர்.

டோனியுடன் ஒன்றாக இணைந்து டாஸ் போட வந்தது என் வாழ்வில் ஒரு ஸ்பெஷலான நிகழ்வு. டோனி எனது ரோல்மாடல், நான் அவரிடம் இருந்து தான் மிக அதிகமான விசயங்களை கற்றுள்ளேன்.

நார்ட்ஜே மற்றும் ரபாடா இல்லாமல் பந்துவீச்சில் எதிரணிகளை எப்படி சமாளிக்க போகிறோம் என்று யோசித்தோம், எங்களிடம் இருக்கும் வீரர்களை வைத்து விளையாடுவதை தவிர வேறு எந்த வழியும் எங்களுக்கு இல்லை.

ப்ரிதிவி ஷா மற்றும் ஷிகர் தவான் பவர்ப்ளேவில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்களின் சில ஷாட்கள் மிக அருமையாக இருந்ததாக கூறியுள்ளார்.

Sharing is caring!