கிளம்பினார் டோனி! எதிரணியுடன் மோத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயார்..!!

ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக டோனியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரும் மும்பைக்கு கிளம்பி சென்றார்கள்.

8 அணிகள் இடையிலான 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 9-ந் தேதி முதல் மே 30-ந் தேதி வரை சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் நடக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் 10-ந் திகதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சந்திக்கிறது.

கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையம் அமைத்து போட்டி நடைபெறுவதாலும், கடும் கட்டுப்பாடுகள் எதிரொலியாவும் இந்த முறை எந்தவொரு அணிக்கும் சொந்த ஊரில் போட்டிகள் கிடையாது. பொதுவான இடத்தில் தான் அனைத்து ஆட்டங்களும் நடத்தப்படுகிறது. ரசிகர்களுக்கும் அனுமதி இல்லை.

இந்த சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கடந்த 8-ந் திகதி தொடங்கி 2 வாரம் நடந்தது. டோனி, ருதுராஜ் கெய்க்வாட், அம்பத்தி ராயுடு, ஜெகதீசன், சாய் கிஷோர் உள்ளிட்ட வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.

இந்த நிலையில் சென்னை அணி விமானம் மூலம் நேற்று மும்பை சென்றது. மும்பையில் நடைபெறும் முதல் கட்ட லீக் ஆட்டங்களுக்கு தயாராக அங்குள்ள ஸ்டேடியத்தில் இன்று முதல் வீரர்கள் பயிற்சியை தொடங்குகிறார்கள்.

Sharing is caring!