முதலிடம் பிடித்த இந்தியா லெஜெண்ட்ஸ் அணி!

இந்தியாவில் நடைபெற்றுவரும் வீதி பாதுகாப்பு உலகத் தொடரின் (Road Safety World Series) புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த இலங்கை லெஜெண்ட்ஸ் அணியை இரண்டாம் இடத்துக்கு பின்தள்ளி இந்தியா லெஜென்ட்ஸ் அணி முதல் இடத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (பி.சி.சி.ஐ) அனுமதியுடன் மஹாராஷ்ராவின் வீதி பாதுகாப்பு அமைப்பின் ஏற்பாட்டினால் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. வீதி பாதுகாப்பு உலகத் தொடர் 2020/21  பருவக்காலத்துக்கான தொடராக இந்தியாவின் ராய்பூர் ஷயீட் வீர் நாரயணன் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும், இப்போட்டித் தொடரானது கடந்த ஆண்டு மார்ச் 7 ஆம் திகதியன்று மும்பையில ஆரம்பமாகியிருந்தது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 11 ஆம் திகதியன்று போட்டித் தொடர் இடைநிறுத்தப்பட்டு, இத்தொடர் இவ்வாண்டு மார்ச் 5 ஆம் திகதி மீண்டும் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து தொடரப்பட்டது.

இதன்படி போட்டிகளின் முடிவில் இலங்கை, இந்திய, தென் ஆபிரிக்க லெஜென்ட் அணிகள் ஆகியன அரை இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் இங்கிலாந்து லெஜெண்ட்ஸ் அணியும், மேற்கிந்தியத் தீவுகள் லெஜெண்ட்ஸ் அணியும் இன்றைய தினம் மோதிக்கொள்ளவுள்ளன. இப்போட்டியில் வெற்றிபெறும் நான்காவது அணியாக அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், இந்திய லெஜெண்ட்ஸ் அணியும் இங்கிலாந்து லெஜென்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 79 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை  லெஜென்ட் அணி 7.4 ஓவர்களுக்கு அடைந்துவிட்டால் புள்ளிப் பட்டியலின் நிகர ஓட்ட வேகத்தின் அடிப்படையில் முதலிடம் பிடிக்கும் என அறிவுறுத்தப்பட்டது. ஆகவே, இப்போட்டியில் இலங்கை லெஜெண்ட்ஸ் அணி 7.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

இருந்தபோதிலும், நேற்றைய தினம் பங்களாதேஷ் லெஜெண்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தென் ஆபிரிக்க லெஜெண்ட்ஸ் அணி வெற்றி பெற்றதையடுத்த புதிய புள்ளி விபரப்பட்டியலில் இந்திய லெஜெண்ட்ஸ் அணி முதலிடத்தையும், இலங்கை லெஜெண்ட்ஸ் அணி இரண்டாவது இடத்தையும் தென் ஆபிரிக்க லெஜெண்ட்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றியீட்டியமையை முன்வைத்து இந்திய அணிக்கு முதலிடத்தையும், இலங்கை அணிக்கு இரண்டாவது இடத்தையும் வழங்கியுள்ளதாக போட்டி ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. அப்படியாயின், இங்கிலாந்து எதிரான லீக் போட்டியில் இலங்கை அணிக்கு 7.4 ஓவர்களில் வெற்றியீட்டினால் முதலிடத்தை பெற முடியும் என அறிவுறுத்தியமை எதற்கு என கிரிக்கெட் அபிமானிகள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

லீக் சுற்றின் தீர்மானமிக்க கடைசிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் லெஜெனட்ஸ் அணி இங்கிலாந்து  லெஜெண்ட்ஸ் அணியை சந்திக்கவுள்ளது. தீர்மானமிக்க இப்போட்டி இன்று இரவு 07.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Sharing is caring!