ஐபிஎல் ஏலத்தில் அதிக விலை போன டாப் ஐந்து வீரர்கள்!

ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு போன வீரர்களில், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிறிஸ் மோரிஸ் முதல் இடத்தில் உள்ளார்.

இந்தியாவின் சென்னையில் நேற்று முன் தினம் ஐபிஎல் ஏலம் நடைபெற்றது. இதில் ஆல் ரவுண்டர்களே அதிகம் கவனம் பெற்றனர்.

அப்படிப்பட்ட வீரர்களையே ஐபிஎல் அணிகளும் தெரிவு செய்தன.

அந்த வகையில், இந்த 2021 ஐபிஎல்லில் அதிக விலைக்கு போன டாப் ஐந்து வீரர்களில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிறிஸ் மோரிஸை பஞ்சாப் அணி 16.52 கோடிக்கு வாங்கியது.

இவருக்கு அடுத்த படியாக, நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கைல் ஜேம்சனை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 15 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது.

இவரைத் தொடர்ந்து மூன்றாவதாக அவுஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரரான க்ளான் மெக்ஸ்வேலை, பெங்களூரு அணி 14.25 கோடிக்கும், அவுஸ்திரேலியாவின் இளம் வீரர் ஜெய் ரிச்சர்ட்சனை, 14 கோடிக்கு பஞ்சாப் அணியும், கிருஷணப்பா கெளதமை சென்னை அணி 9 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு எடுத்துள்ளது.

Sharing is caring!