அமெரிக்க ஓபன் டென்னிஸ் – முதல் சுற்றில் ஜான் இஸ்னர் அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ரபெல் நடால் ஆகியோர் காயத்தால் இந்த முறை பங்கேற்கவில்லை.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது. இதில் ஆண்களுக்கான முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன.

அமெரிக்காவை சேர்ந்த ஜான் இஸ்னர், சக வீரரான பிரண்டன் நகாஷிமாவுடன் மோதினார். இதில் முதல் செட்டை நகஷிமா 7-6 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் சிறப்பாக ஆடிய நகாஷிமா 7-6 என வென்றார். மூன்றாவது செட்டை 6-3 என வென்றார்.

இறுதியில், நகாஷிமா 7-6, 7-6, 6-3 என செட் கணக்கில் வென்று இஸ்னருக்கு அதிர்ச்சி கொடுத்தார். இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Sharing is caring!