கிரிக்கெட் வீரர் நடராஜன் வெளியிட்ட காணொளி…!!

சமீபத்தில் தனது காலில் அறுவைசிகிச்சை மேற்கொண்ட கிரிக்கெட் வீரர் நடராஜன், மிகக் கடினமான உடற்பயிற்சியினை மேற்கொள்ளும் காட்சியினை வெளியிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சோ்ந்த நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து பெரும் ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

இதனையடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்ற நடராஜன் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடி, பின்பு காயம் காரணமாக வெளியேறினார். அதன்பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து சமீபத்தில் வீடு திரும்பியுள்ளார்.

வீடு திரும்பியதும் தனது குழந்தையின் 6 மாத பிறந்தநாளைக் கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டார். இப்புகைப்படம் ஏராளமான லைக்ஸை அள்ளிக்குவித்தது.

இந்நிலையில் நடராஜன் எப்போது கிரிக்கெட் விளையாட வருவார் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

ஆம் மிகவும் தனது உடல்நிலையை சீராக கொண்டுவருவதற்கு மிகக் கடினமான உடற்பயிற்சியினை மேற்கொண்டுள்ளார். இக்காட்சி சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.

Sharing is caring!