ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் புதிய தரவரிசை பட்டியலில் சறுக்கிய விராட் கோஹ்லி! முன்னேறி அசத்தும் இலங்கை அணி வீரர்கள்…. வெளியான தகவல்!

ஐசிசி வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் கோஹ்லி சறுக்கியுள்ளார்.

புதிய பட்டியலில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் (901 புள்ளிகள்) முதலிடத்திலும், அவுஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித் (891 புள்ளிகள்) 2-வது இடத்திலும், லபுஸ்சேன் (878 புள்ளிகள்) 3-வது இடத்திலும் தொடருகின்றனர்.

நாட்டிங்காமில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அரைசதம் மற்றும் சதம் அடித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் (846 புள்ளிகள்) ஒரு இடம் உயர்ந்து 4-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் டக்-அவுட் ஆன இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி (791 புள்ளிகள்) ஒரு இடம் சறுக்கி 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இலங்கை வீரர்களை பொறுத்தவரையில் திமுத் கருணரத்னே (712 புள்ளிகள்) 12வது இடத்தில் உள்ளார்.

மேலும் சில முக்கிய இலங்கை வீரர்கள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

ஏஞ்சலோ மேத்யூஸ் 24வது இடத்திற்கும், நிரோஷன் டிக்வெல்ல 30வது இடத்திற்கும், தனஞ்செய டிசில்வா 31வது இடத்திற்கும் முன்னேற்றியுள்ளனர்.

Sharing is caring!