சர்வதேச டி20 போட்டியில் புதிய சாதனை படைக்க உள்ள விராட் கோலி

சாதனை படைக்க உள்ள விராட் கோலி… சர்வதேச டி 20 போட்டியில் 3000 ரன்களை கடக்கும் முதல் வீரர் என்ற சாதனையை படைக்கப் போகிறார் விராட் கோலி.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நாளை முதல் தொடங்க உள்ளது. இத்தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 72 ரன்கள் அடித்தால் சர்வதேச டி 20 போட்டியில் 3000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார்.

சர்வதேச டி 20 போட்டியில் இதுவரை 2928 ரன்களை அடித்துள்ளார் விராட் கோலி. நியூசிலாந்து அணியின் மார்டின் கப்டில் 2839 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், இந்திய அணியின் ரோஹித் சர்மா 2773 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

ரோஹித் சர்மா 4 சதங்களையும், மார்டின் கப்டில் 2 சதங்களையும் அடித்துள்ளனர். ஆனால் விராட் கோலி இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை. விராட் கோலியின் அதிகபட்ச ஸ்கோர் என்றால் அது 94 ரன்கள் தான்.

Sharing is caring!